போச்சம்பள்ளி, செப்.25: பாடேதளாவ் ஏரி காட்டகரம் முதல் திம்மிநாயக்கன்பட்டி ஏரி வரை கால்வாய் அமைத்து தர வேண்டும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக விவசாயிகள் சங்க கிளை துவக்க விழா கூட்டம், போச்சம்பள்ளி வட்டம், சுண்டகாப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நர்சரி உரிமையாளர் சங்க ஆலோசகர் கண்ணையா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வரதராஜன், சக்திவேல், வேலு, சங்கர், முருகன், வெங்கடேசன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் முனிரத்தினம் வரவேற்றார். மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அனுமந்தராசு, திம்மராயன், கோவிந்தராஜ், முல்லைசின்னசாமி, சுந்தரேசன், ரமேஷ், சிலம்பரசன், வெள்ளையன், சின்னாசமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் படேதலாவ், காட்டகரம் முதல் திம்மிநாயக்கன்பட்டி ஏரி வரை, கால்வாய் அமைத்து நீர் நிரப்ப வேண்டும். குள்ளம்பட்டி, பஞ்சாயத்தில் உள்ள 19 ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
+
Advertisement