ஓசூர், அக்.24: ஓசூரில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் பகுதியில் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. மாலை நேரங்களில் தினமும் மழை பெய்கிறது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புடன், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ஓசூர் மாநகராட்சி பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, பொது இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதை அகற்றி, கொசு மருந்து தெளிக்க வேண்டும். பஸ் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

