காவேரிப்பட்டணம், அக்.24: காவேரிப்பட்டணம் அருகே, நரிமேடு கிராமத்தில் பாலகணபதி, சுப்பிரமணீஸ்வரர், ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மேளதாளத்துடன், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று பூஜை செய்து, புனித நீர் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

