கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கொல்லப்பள்ளியை சேர்ந்த 16வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 9ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த பெயிண்டர் ஆனந்த் (21) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.
+
Advertisement