தேன்கனிக்கோட்டை, செப்.24: பாப்பாரப்பட்டி வட்டம், சொக்கரப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ஆதிமூலம் மகன் பிரவீன்குமார் (36), தனியார் மருந்து கம்பெனியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று, மருந்து ஆர்டர் பெற்று கொண்டு, டூவீலரில் ஓசூர் நோக்கி சென்றுள்ளார். பெண்ணங்கூர் கிராமம் அருகேயுள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, எதிரே வந்த தனியார் பஸ், பிரவீன்குமாரின் டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆதிமூலம் தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், எஸ்ஐ நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement