போச்சம்பள்ளி, செப்.24: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்தி விழாவில், அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவர். போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புலியூர் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பெண்கள் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு மல்லிகைப்பூ, வில்வ இலையால் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி, வெண்பொங்கல் படைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளை அழைத்து, அவர்களை பெண் தெய்வமாக பாவித்து அவர்களுக்கு நெற்றியில் மஞ்சள், குங்குமம், வைத்து பூஜை செய்து, தாம்பூலம் கொடுத்து வழிபட்டனர்.
+
Advertisement