ராயக்கோட்டை, ஆக.23: நாடு முழுவதும் வரும் 27ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா ெகாண்டாடப்படுகிறது. விழாவிற்கு இன்னும் 4நாட்களே உள்ள நிலையில், ராயக்கோட்டை அருகே பிள்ளையார் அக்ரஹாரம், கொப்பகரை, கூலியம் ஆகிய பகுதிகளில் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர். தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளை, முன்னதாக தேர்ந்தெடுத்து சிலர் பணம் செலுத்தி புக் செய்தும் வருகின்றனர். இதனிடையே, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு சிலைகள் புக்கிங் குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement