போச்சம்பள்ளி, நவ.22: போச்சம்பள்ளி அருகே மேட்டுபுலியூர் கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களின் வசதிக்காக, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அந்த தெரு விளக்கு எரியாமல் உள்ளது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியே இருளில் மூழ்கியுள்ளதால் இரவு நேரத்தில் விவசாய பணிகளுக்கு சென்று வருபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தெருவிளக்கை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


