கிருஷ்ணகிரி, நவ.22: அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி 60 ஆண்டு விழாவில் பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் சமையலறை கட்டிடத்தை மதியழகன் எம்எல்ஏ., திறந்து வைத்தார். பர்கூர் ஒன்றியம் அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி 60ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நுழைவு வாயில் திறப்பு விழா மற்றும் ரூ.9 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய இருப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதியழகன் எம்எல்ஏ., கலந்து கொண்டு நுழைவு வாயில் மற்றும் கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஐகொந்தம் கொத்தப்பள்ளி ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம், ரூ.6.06 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதேபோல ஐகொந்தம், பெருகோபனப்பள்ளி, தொகரப்பள்ளி, மேல்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 236 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் அறிஞர், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, நிர்வாகிகள் கிருபாகரன், நாகராசன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement


