ஓசூர், ஆக.22: ஓசூர் வழியாக தேனிக்கு கடத்த முயன்ற 110 கிலோ குட்கா பொருட்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அதில் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை மேற்கொண்டனர். அதில், குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36), தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த பெத்தனசாமி(54) என்பதும், பெங்களூருவில் இருந்து தேனிக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, ரூ.86,522 மதிப்பிலான 110 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement