தேன்கனிக்கோட்டை, நவ.21: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சி சித்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா மகன் சென்னபசப்பா(36), எலக்ட்ரீசியன். இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், நாகமல்லிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சென்னபசப்பாவின் நண்பர்களில் சிலர் சபரிமலைக்கு செல்ல மாலை போட்டுள்ளனர். நேற்று மதியம், ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து சீரியல் செட் போட்டிக் கொண்டிருந்த சென்னபசப்பா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், உடல் கருகிய அவரை மீட்டு, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்ததனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, வரும் வழியிலேயே சென்னபசப்பா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று, சென்னபசப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


