ஓசூர், ஆக. 21: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் அதிகாரிகள், முகுலப்பள்ளி கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், மணல் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து 6 யூனிட் மணலுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதனை பாகலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தாசில்தார் குணசிவா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்தும், எங்கிருந்து மணல் கடத்தி வரப்பட்டது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement