தேன்கனிக்கோட்டை, ஆக.21: தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில், தேன்கனிக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில், பள்ளி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், சமூக குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நாடகமாக நடித்து காட்டினர். மாஜிஸ்திரேட் திருமலை போதை பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், சமூக சீர்கேடுகள் குறித்து மாணவர்களிடையே விளக்கி பேசினார். முகாமில், பள்ளி தலைமை ஆசிரியர் லூர்துசாமி, வழக்கறிஞர்கள், போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement