சேலம், நவ.19: ஓசூர் விஎஸ்டி சென்ட்ரல் கியா நிறுவனத்தின் சார்பில், வாடிக்கையாளர்களுக்கான கியா ஓனர்ஷிப் சர்வீஸ் முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாமினை ஓசூர் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் முன்னாள் மேலாளர்(தர உத்தரவாதம்) சுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விற்பனை மேலாளர் சதீஷ், சேவை மேலாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘இந்த பண்டிகை காலத்தில் சிறப்பு சலுகைகள், இலவச சோதனைகள், அட்டகாசமான ஆஃபர்கள் காத்திருக்கின்றன. மேலும், சேவை பிரிவு சிறப்பு சலுகைகள், அக்சஸ்சரிஸ்களில் குறைந்தது 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இலவச ஜெனரல் செக்கப், இலவச கார் டாப் வாஷ், குவாலிட்டி கேம்பைன், துரு சர்வீஸ், புதிய கார் டிஸ்பிளே மற்றும் டெஸ்ட் டிரைவ்(சைரோஸ், கிளாவிஸ்) வாடிக்கையாளர் பரிந்துரை மூலம் புதிய கார் விற்பனை வாய்ப்பு, 3 ஆண்டு கடந்த மற்றும் அதிக கிலோமீட்டர் ஓடிய கார்களுக்கு இலவச மதிப்பீடு உங்கள் வசதிக்குகேற்ப நேரம் புக்கிங் செய்யப்படும்,’ என்றனர்.
+
Advertisement


