ஓசூர், நவ.19: ஓசூரில் பாஜ மாநில தொழில் பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். மக்களும் அதனை பூர்த்தி செய்து திரும்பி அளித்து வருகின்றனர். இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படுகிறது. சிறப்பு தீவிர திருத்தத்தால், ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. யாரும் வாக்குரிமையை இழக்க மாட்டார்கள். இறந்தவர்களை தவிர அனைவரும் இந்த தீவிர திருத்த பணியில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+
Advertisement


