தேன்கனிக்கோட்டை, செப்.19: தேன்கனிக்கோட்டை 13வது வார்டில், ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 13வது வார்டு ராஜாஜி தெரு 2வது சந்தில், பொது நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஜ மேற்கு மாவட்ட செயலாளர் பாபு, வார்டு கவுன்சிலர்கள் சஞ்சனா பாலாஜி, சீதர், சீனிவாசன், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement