ஊத்தங்கரை, நவ.18: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி, பொம்மனாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிங்காரப்பேட்டை எஸ்ஐ மாதையன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அருணாச்சலம்(46) மற்றும் சத்தியமூர்த்தி(25) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 10 மதுபாட்டில் என 20 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement


