Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

எருது விடும் விழா நடத்திய 11 பேர் மீது வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி, நவ.18: கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இந்த போட்டி நடத்த உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து நித்யானந்தன்(30) உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், வேப்பனஹள்ளி அருகே உள்ள ஜோடுகொத்தூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து ராஜா(34) மற்றும் 4 பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.