காவேரிப்பட்டணம், செப்.18: மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியாக நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசங்கர் தலைமை வகித்தார். தமிழாசிரியர் குணசேகரன் வரவேற்றார். முன்னதாக பெரியார், அண்ணா படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிநாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சிவசங்கர், பெரியாரின் வாழ்க்கை வரலாறு, விடுதலை போராட்டத்தில் பெரியாரின் பங்கு, கள்ளுக்கடை மறியல் போராட்டம் உள்ளிட்ட உயரிய சமுதாய சீர்திருத்த சிந்தனையை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் விமலன், ஆனந்தன், தெய்வம், சுகன்யா, சங்கரி, புவனேஸ்வரி, மாயவன், காயத்திரி, ரமோலினா மேரி, சேகர், மயிலரசி, ஜனனி, வெங்கடேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். ஆசிரியர்கள் குணசேகரன், விமலன், பாலாஜி, தனலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தனர். கணித ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.
+
Advertisement