போச்சம்பள்ளி, செப்.18: பாப்பாரப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் வருஷாபிஷேக பூஜையில், பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். போச்சம்பள்ளி தாலுகா, பாப்பாரப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சென்றாயபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டான நிலையில், வருஷாபிஷேக பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை பம்பை வாத்தியங்கள் முழங்க, தாரை தப்பட்டையுடன் கொட்டாவூர் சாலையில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அதனை தொடர்ந்து சென்றாய பெருமாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், இருமத்தூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
+
Advertisement