ஓசூர், அக். 17: ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 93வது பிறந்தநாள், உலக இளைஞர் தினமாக கொண்டாட்டப்பட்டது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அப்துல்கலாமின் செயல்பாடு மற்றும் பெருமைகளை எடுத்துரைத்தார். கல்லூரி ஆராய்ச்சி துறை தலைவர் சுரேஷ்பாபு, கல்வி பிரிவு தலைவர் வெங்கடேசன், செல்வம், தனசேகர், இயந்திரதுறை தலைவர் அறிவுடைநம்பி, பயோடெக்னாலஜி தலைவர் மனோவாடாகன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மெக்கானிக்கல் பொறியியல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
+
Advertisement