ராயக்கோட்டை, செப்.17: ராயக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் முட்டைக்கோஸ் விலை குறைந்து, ஒரு மூட்டை ரூ.300க்கு விற்பனையானது. தென்பெண்ணை ஆற்றங்கரையிலுள்ள பந்தர்பட்டி, பண்டப்பள்ளி, தொட்டமெட்டரை, லிங்கனம்பட்டி, கருக்கனஅள்ளி, தொட்டதிம்மனஅள்ளி, கெலமங்கலம், சூளகிரி மற்றும் ராயக்கோட்டை பகுதிகளிலுள்ள கிராமங்களில் அதிகளவில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைச்சலாகும் காலிபிளவர் விற்பனைக்காக தமிழகம், புதுச்சேரி, கேரளாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் காலிபிளவர் அதிகளவில் விளைச்சலானதால் ராயக்கோட்டை காய்கறி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்தது. 30 காலிபிளவர் நிரப்பிய ஒரு மூட்டையை ரூ.300க்கு வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். அதன்படி ஒரு கிலோ கொண்ட பூ ரூ.10க்கு விற்பனையாகிறது. இதை வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனை செய்கின்றனர்.
+
Advertisement