ஓசூர், செப்.17: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் அமீரியா ஜங்ஷன் அருகில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. விசாரணையில் குட்கா பொருட்கள் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்டதும், அதை கடத்தி வந்தவர் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பெரிய கூளியூர் பக்கமுள்ள கண்ணகாடு பகுதியைச் சேர்ந்த வினோத் (35) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 400 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement