கிருஷ்ணகிரி, செப்.17: பீகார் மாநிலம், கடார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிந்துகுமார் (35). இவர் பர்கூர் அருகே சின்ன பர்கூர் பகுதியில், குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு, கிருஷ்ணகிரி -சென்னை சாலையில் சின்ன பர்கூர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement