போச்சம்பள்ளி, அக்.16: போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(55). விவசாயியான இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு பின்பு வழக்கம்போல் ஆடுகளை வீடுடிற்கு அருகே உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார். நள்ளிரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்த நாய்கள், ஆடுகளை கடித்து குதறின. சத்தம் கேட்டு தேவராஜ் பட்டிக்கு விரைந்து சென்றார். அங்கு, 4 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து உயிரிழந்து கிடந்ததை கண்டு கண்ணீர் வடித்தார். இதுகுறித்த தகவலின்பேரில், சந்தூர் கால்நடை மருத்துவர் சந்தோஷ் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து படுகாயமடைந்த ஒரு ஆட்டுக்கு சிகிச்சை அளித்தார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட தேவராஜ் கூறுகையில், இப்பகுதியில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
+
Advertisement