கிருஷ்ணகிரி, அக்.16: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதில், கவிதை, கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டி ஆகியவை நடந்தது. இப்போட்டிகளை கல்லூரி முதல்வர் கீதா தொடங்கி வைத்தார். கவிதைப் போட்டியில் 13 மாணவ, மாணவியர், கட்டுரை போட்டியில் 21 பேர், பேச்சுப் போட்டியில் 13பேர் என மொத்தம் 47 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2ம் பரிசாக ரூ.7,000, 3ம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
+
Advertisement