தேன்கனிக்கோட்டை, செப்.15: தேன்கனிக்கோட்டையில், ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார். மூலதான மானிய திட்டத்தில் ரூ.1 கோடி மதிப் பில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.