கிருஷ்ணகிரி, ஆக.15: கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றும் வகையில், அனைவருக்கும் தேசியக் கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளியின் நிறுவனர் டாக்டர் அன்பரசன் தலைமை தாங்கி, அனைவருக்கும் தேசியக் கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சங்கீதா அன்பரசன், மேலாளர் பூபேஷ் மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement