தேன்கனிக்கோட்டை, அக்.14: தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறை சார்பில் வாங்க கற்றுக்கொள்வோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறை சார்பில், வாங்க கற்றுக்கொள்வோம் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு நிலைய அலுவலர் மற்றும் நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்களால், பொதுமக்கள் முன்னிலையில் தீபாவளி பண்டிகையிள் போது பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு வெடிப்பது. தற்போது மழைகாலம் என்பதால், மழை வெள்ளத்தின் போது சிக்கி கொண்டால் எவ்வாறு பாதுகாப்பாக பொது மக்களை மீட்பது என்பது குறித்து செயல்முறை செய்து காண்பித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
+
Advertisement