தேன்கனிக்கோட்டை, அக்.14: தளி ஜெயந்தி காலனியில் 250 வீடுகள் உள்ளன. அப்பகுதியினர் குடிநீர் தேவைக்கு, கடந்த 40 வருடங்களுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. கடந்த 2018-19ம் ஆண்டில், ஒன்றிய பொது நிதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். தற்போது நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து தூண்களில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. முழு கொள்ளளவு தண்ணீர் தேங்கும் போது, டேங்கில் தண்ணீர் ஒழுகுகிறது. சிதிலமடைந்து அபாயகரமாக நிலையில் காணப்படும் இந்த நீர்த்தேக்க தொட்டியால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இதனை இடித்து அகற்றி, புதியதாக தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement