ஊத்தங்கரை, செப்.14: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32), மருத்துவர். இவரது மனைவி நிலா (28). இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. நிலா இந்து சமய அறநிலையதுறை குரூப் 2 தேர்வாகியுள்ளார். விக்னேஷ் ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணிக்கு வந்தவர், நள்ளிரவில் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு அவரது அறையில் தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை மருத்துவமனையின் மருந்தாளுநர் இளையவேந்தன் என்பவர், கதவை தட்டி அழைத்த போது, அவர் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, மருத்துவர் விக்னேஷ் தரையில் கவிழ்ந்தவாறு இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஊத்தங்கரை போலீசார், விக்னேஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
+
Advertisement