ஓசூர், செப்.14: ஓசூர் ஐஎன்டியுசி அலுவலகத்தில், ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் கூறியதாவது: ஓசூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. ஓசூரில் தொடங்கும் புதிய தொழிற்சாலைகளில் பணியாற்ற, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஓசூர் மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். ஓசூர் பேரூராட்சியாக இருந்து வேகமாக மாநகராட்சியாக தரம் உயர்ந்து விட்டது. ஆனால் அதற்கு தேவையான கட்டமைப்புகளை செய்யவில்லை. ஓசூர் மாநகராட்சியில் மண் சாலைகள் அதிக அளவில் உள்ளது. எனவே, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement