ஓசூர், அக். 13: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழ்நாடு கர்நாடகா மாநில எல்லை பகுதியான ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில கடைகள் தீபாவளியை முன்னிட்டு செயல்படுகின்றன. இந்த பகுதி மாநில எல்லைப் பகுதியில் உள்ளதால் அருகில் உள்ள கர்நாடக மாநில மக்கள், இங்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பல இடங்களில் பட்டாசு தொழிற்சாலைகளை இயங்கி வருவதால், பட்டாசுகள் விலை குறைவாக உள்ளது எனவும், சிலர் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெங்களூர் பகுதியில் சிறு குரு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் விடுமுறை நாள் என்பதால், மாநில எல்லையில் உள்ள பட்டாசு கடைகளுக்கு படையெடுத்தனர். பெங்களூர்- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக செயல்பட்டு வரும் கடைகளுக்கு வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை, சிப்காட் போலீஸ் இன்பெக்டர் சையத்முபாரக் தலைமையில் போலீசார் போலீசார் போக்குவரத்தை
சீரமைத்தனர்.