தேன்கனிக்கோட்டை, செப்.12: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் லோகேஷ் (34). இவருக்கும், உறவினர் கரியப்பா (65) என்பவர் தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி, லோகேஷ் நிலத்தின் அருகே இருந்த போது கரியப்பா தரப்பினர் லோகேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து லோகேஷ், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், கரியப்பா, மராப்பா (50), முனியப்பா (40), ஷோபா (40), கீதா (45), ரங்கம்மா (55) ஆகிய 6 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement