போச்சம்பள்ளி, ஆக.12: செல்லகுடப்பட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மதியழகன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். செல்லகுடப்பட்டி ஊராட்சியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.9.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுமான பணி, ரூ.3.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ.32 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.20 லட்சம் மதிப்பில் நாகர் கோயிலை சுற்றி தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சங்கர், மீனவர் அணி மாவட்ட தலைவர் வடிவேலன், துணை தலைவர் சுதாகர், மாவட்ட பிரதிநிதி தயாநிதி, கோவிந்தசாமி, சின்னசாமி, பெரியசாமி, சம்பூரணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement