தேன்கனிக்கோட்டை, டிச.11: தளி போலீசார், நேற்று முன்தினம் புட்டன்தொட்டி பக்கமாக ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த லட்சுமிபுரம் புட்ராம் (31), ராம்குமார் (25), காடுகெம்பத்பள்ளி மாதேவ் (25), புட்டன்தொட்டி அருண் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம், 5 டூவீலர்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement


