ராயக்கோட்டை, டிச.11:ராயக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே அபாயகரமான சாலை உள்ளது. அதற்கடுத்து தக்காளி மண்டிகள் உள்ளது. ராயக்கோட்டையிலிருந்து ஓசூர் செல்லும் சாலையில் பூ மார்க்கெட்கள், ரயில் நிலையம் உள்ளது. அதன் அருகே உள்ள அபாயகரமான சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர் மற்றும் பெங்களூருவுக்கு சென்று வருகின்றன. பூ மார்க்கெட்டிற்கும், தக்காளி மார்க்கெட்டிற்கும் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய சாகுபடி பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். இந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலையை கடப்பதில் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வளைந்து செல்லும் சாலையை நேராக்கி, தக்காளி மண்டியிலிருந்து எச்சம்பட்டி வரை சென்டர்மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


