கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள சூளகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(25), விவசாயி. இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த முருகன்(25) என்பவர், தனது டூவீலரில் வேகமாக சென்றுள்ளார். இதை சக்திவேல் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும், அவர் வைத்திருந்த அரிவாளை எடுத்து, சாலையின் நடுவில் நின்று கொண்டு சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சக்திவேல் ராயக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முருகன் சாலையின் நடுவில் கையில் அரிவாளுடன் நின்று தகராறு செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி முருகனை நேற்று கைது செய்தனர்.
+
Advertisement


