தேன்கனிக்கோட்டை, செப். 11: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை ஊராட்சி ஈரிசெட்டி ஏரி கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தன் மகன் வேல்முருகன் (26). இவர் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில். தற்காலிக ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த சிறுமி தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், வேல்முருகன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
+
Advertisement