கிருஷ்ணகிரி, செப்.11: கிருஷ்ணகிரி பழையபேட்டை பாத்திமா நகரை சேர்ந்த 20 வயது மாணவி, பர்கூர் அரசு கலைக்கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், மாணவி தான் படிக்க வேண்டும். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், தொடர்ந்து அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த மாணவி, கடந்த 8ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement