போச்சம்பள்ளி, செப்.10: போச்சம்பள்ளியில் நேற்று காலை திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், மக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறி ரோட்டிற்கு வந்து வானத்தை பார்த்தனர். அதே போல், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி வானத்தையே பார்த்தனர். அப்போது வானத்தில் ஜெட் விமானம் ஒன்று சென்றதால், இதுபோல் சத்தம் வந்தது தெரிய வந்தது. இது குறித்து மக்கள் கூறுகையில், வானத்தில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது ெஜட் விமானம் சென்றதால் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது,’ என்றனர்.
+
Advertisement