தேன்கனிக்கோட்டை, செப்.10: தேன்கனிக்கோட்டையில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தனியார் மண்டபத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மஞ்சுநாத், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, காப்பீடு அட்டை உள்ளிட்ட துறை சார்ந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, 1வது வார்டு முதல் 9வது வார்டு வரையுள்ள பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்து கொண்டு, முகாமை பார்வையிட்டார். இதில் நாகரத்தினா, சுமதி, கிருஷ்ணன், அப்தூர் ரஹ்மான், சல்மான், இதயத்துல்லா, முஜாமில்பாஷா, மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement