ராயக்கோட்டை, அக்.9: ராயக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே ஓட்டல்கள், டீ கடைகள், பூ மார்க்கெட் போன்றவை உள்ளன. அவற்றை தாண்டி தக்காளி மண்டிகள் உள்ளன. அதோடு ரயில் நிலையமும் மருத்துவமனை எதிரில் அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் ஓசூர் மற்றும் பெங்களூருவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் வேகத்தடை இருப்பதால், மழை பெய்யும் போது மழை நீர் செல்ல முடியாமல் வேகத்தடையில் நிற்கிறது. அதோடு கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இறங்கி செல்வதால், மழை நீர் சாக்கடை போல காட்சியளிக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement