ஓசூர், அக். 9: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், டூவீலரில் சோதனை செய்தனர். அப்போது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டறையை சேர்ந்த விஜய்(25) என்பவரை கைது செய்து, அவர் கடத்தி வந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், ஓசூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement