ஓசூர், அக்.9: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராபிடோ செயலி மூலம், பயணிகளை தங்களுடைய சொந்த டூவீலர்களில் அழைத்து செல்வதாக தகவல் வந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவர்கள் 9 டூவீலர்களை பறிமுதல் செய்து, ஓசூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணைக்கு பின், 9 டூவீலர்களும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. போக்குவரத்து அலுவலர், டூவீலர்களில் பயணிகளை அமர வைத்து இயக்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து, அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதித்தார். இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், ‘ராபிடோ செயலி மூலம் டூவீலர்களை இயக்குவதால், ஆட்டோ தொழில் பாதிப்படைந்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,’ என்றனர்.
+
Advertisement