கிருஷ்ணகிரி, செப்.9: கிருஷ்ணகிரியில், வீட்டின் மீது மரம் விழுந்ததில் காயம் அடைந்தவர்களுக்கு, ஆறுதல் கூறிய மதியழகன் எம்எல்ஏ நிதியுதவி வழங்கினார். கிருஷ்ணகிரி நகராட்சி 1வது வார்டு கோட்டை பகுதியில், நள்ளிரவில் புளியமரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஒரு பெண், 2 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் பரிதாநவாப், நகர திமுக பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
+
Advertisement