ஓசூர், செப்.9: ஆவணி மாத பவுர்ணமியையொட்டி, பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மிளகாய் வற்றல் சிறப்பு யாகம் நடந்தது. ஓசூர் மோரணப்பள்ளி கிராமத்தில் உள்ள ராகு-கேது மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில், ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தங்ககவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். காலபைரவர், ராகு, கேது ஆகிய மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
+
Advertisement