ஓசூர், ஆக.9: ஆணவக்கொலை செய்யப்பட்ட கவீனுக்கு நீதிக்கேட்டும், ஆணவக்கொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்றக்கோரியும் ஓசூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் உதய் தலைமை வகித்தார். பரசுராமன், பிரகாஷ், அம்ரிஸ், நவீன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கவீனுக்கு நீதி கிடைக்க வேண்டும், ஆணவக்கொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
+
Advertisement