ஓசூர், அக். 8: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டில், டவுன் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரிடம் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில், 50 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. விசாரணையில், அவர் திருவண்ணாமலையை சேர்ந்த ஜெகன்(26) என்பதும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விற்பனை செய்வதற்காக குட்கா பாக்கெட்டுகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement