போச்சம்பள்ளி, டிச.7: காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவீரஅள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சூரியகாந்தி தலைமை வகித்தார். கவிதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் முத்துலட்சுமணன் கலந்து கொண்டு திறன் இயக்கம், மணற்கேணி தூதுவர்கள், மாற்றுத்திறானாளி மாணவர்களுக்கான முகாம், ஆதார் புதுப்பித்தல் மற்றும் மகிழ்முற்றம் ஆகிய பள்ளியிக்கல்வித்துறையின் சிறப்பு திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். கல்வியாளர் அம்சவேணி நன்றி கூறினார்.
+
Advertisement


